திண்டிவனம் : திண்டிவனம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம், நகைக்கு பாலிஷ் போடுவதாகக் கூறி, இரண்டு சவரன் நகையை அபகரித்துச் சென்ற ஆசாமி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது, தமிழ்வாணன் வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத நபர், வீட்டில் இருந்த முனியம்மாளிடம், பித்தளை வளையலை பாலிஷ் போட்டு தருவதாகக் கூறினார்.
அதன்பேரில் முனியம்மாள், பித்தளை வளையலை, அந்த நபரிடம் கொடுத்தார். அந்த நகைக்கு பாலிஷ் போட்டு கொடுத்த ஆசாமி, முனியம்மாள் அணிந்திருந்த 2 சவரன் செயினை பாலிஷ் போட்டு தருவதாகக் கூறியுள்ளார்.
இதை நம்பிய மூதாட்டி, கழுத்தில் இருந்த செயினை கழற்றி கொடுத்தார்.
அப்போது, குடிக்க தண்ணீர் எடுத்து வருமாறு அந்த ஆசாமி கூறியதால், முனியம்மாள் வீட்டிற்குள் சென்றார். பின் வெளியே வந்து பார்த்த போது, அந்த ஆசாமி, 2 சவரன் செயினுடன் தலைமறைவானது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனது மகன் தமிழ்வாணனிடம் தெரிவித்தார். இது குறித்து தமிழ்வாணன், ரோஷணை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார், நகையை நுாதன முறையில் அபகரித்து சென்ற ஆசாமி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.