குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடியில் பத்திரப்பதிவு எழுத்தர் வீட்டில் 20 சவரன் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டிக்கொண்டு, மனைவி சத்தியப்பிரியா உடன் கோயம்புத்துாரில் படிக்கும் மகள் பூஜாவை பார்க்க சென்றார்.
நேற்று காலை, கண்ணனின் தாயார் மீனாட்சி, வீட்டின் முன்பு கோலம் போட சென்றபோது, கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடன், கண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.
குள்ளஞ்சாவடிக்கு வந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் பீரோவில் இருந்த 20 சவரன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம், ஹோம் தியேட்டர் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
கடலுாரிலிருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய் 'கூப்பர்' , வீட்டின் பின்புற வழியாக ஓடி, அப்பகுதி கூட்டுறவு வங்கி அமைந்துள்ள தெரு வழியாக, கடலுார்-சேலம் நெடுஞ்சாலையில் சிறிது துாரம் ஓடி நின்றது. தடவியல் நிபுணர்கள், சம்பவ இடத்தில் கைரேகைகளை சேகரித்தனர்.
புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.