திருப்பூர் : 'தொழில்துறையை பாதிக்க செய்யும் மின் கட்டண உயர்வை தி.மு.க., அரசு வாபஸ் பெற வேண்டும்' என, மா.கம்யூ., அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பேசினார்.
மூலப்பொருட்கள் விலை உயர்வால், ஏற்றுமதி ஆர்டர்கள் கைநழுவி, போட்டி நாடுகளை நோக்கி நகர்கின்றன. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய கடன்கள் மறுக்கப்படுகின்றன.தொழில்துறையை பாதிக்கச்செய்யும் மின்கட்டண உயர்வை, தி.மு.க., அரசு உடனடியாக வாபஸ் பெறவேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னதாக, திருப்பூர் மா.கம்யூ., மாவட்ட குழு அலுவலகத்திலிருந்து, குமரன் ரோடு வழியாக, யுனிவர்சல் தியேட்டர் ரோடு வரை, பேரணி நடத்தப்பட்டது.