வாய்க்கால் அகலத்தில் வடிகால்கள்; பள்ளிக்கரணையில் மக்கள் அவதி
பள்ளிக்கரணை : பள்ளிக்கரணை பகுதியில் பெரும்பாலான தெருக்களில் : மழைநீர் வடிகால்கள் திறந்த நிலையில் உள்ளன. பக்கவாட்டு சுவர் இல்லாத பல வடிகால்கள் : வாய்க்கால் போல அகலமாகிவிட்டதால் : இங்கு வசிக்கும் மக்கள் பலவித பிரச்னையை சந்திக்கின்றனர்.இது குறித்து பள்ளிக்கரணை பொதுமக்கள் கூறியதாவது:பெருங்குடி மண்டலம் பள்ளிக்கரணையில் 189 : 190 ஆகிய இரு வார்டுகள் உள்ளன. மக்கள் நெருக்கம் மிகுந்த இவ்விரு வார்டுகளிலும் : பெரும்பாலான தெருக்களில் மழைநீர் வடிகால் வசதி முறையாக இல்லை.பல தெருக்களில் உள்ள வடிகால்கள் : பக்கவாட்டு தடுப்பு சுவர் இல்லாமலும் : மூடப்படாமல் திறந்த நிலையிலும் உள்ளன. பக்கவாட்டு சுவர் இல்லாததால் : நீர் அரிப்பு காரணமாக பல வடிகால்கள் : வாய்க்கால் அகலத்திற்கு மாறிவிட்டன.மேலும் : திறந்த நிலையில் உள்ள வடிகால்கள் முறையாக சுத்தம் செய்யப்படாததால் : குப்பை தேங்கி நீரோட்டம் தடைபட்டு : ஒரே இடத்தில் நீர் தேங்கி விடுகிறது. இந்த நீர் அசுத்தமடைந்து : கழிவு நீராக மாறி : கொசு பெருக்கத்திற்கு வழிவகுக்கிறது.இதனால் : டெங்கு உள்ளிட்ட நோய் தொற்றுக்கு மக்கள் ஆளாக வேண்டிய சூழல் எழுந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கரணையில் உள்ள 189 மற்றும் 190 ஆகிய வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் துவக்கப்பட்டது.அனைத்து தெருக்களிலும் குழாய்கள் அமைக்கப்பட்டு : சோழிங்கநல்லுாரில் சுத்திகரிப்பு நிலையமும் கட்டப்பட்டது. ஆனால் : இதுவரையில் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கவில்லை.குழாய்கள் பதிக்கப்பட்டு : பணிகள் முடிந்த பிறகும் வீடுகளுக்கு இணைப்பு ஏன் கொடுக்கப்படவில்லை என்பதற்கு அதிகாரிகளிடம் முறையான பதில் இல்லை.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சாலையின் அடியில் புதைக்கப்பட்ட குழாய்களில் : பல குழாய்கள் உடைந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் : பாதாள சாக்கடை திட்டத்திற்காக பதிக்கப்பட்ட குழாய்களில் மழை நீர் புகுந்து : அவை நிரம்பி விடுவதால் : பல இடங்களில் சாக்கடை மூடி வழியாக நீர் வெளியேறி : சாலைகளில் வழிந்து ஓடுகிறது.
எனவே : இத்துறை சார்ந்த அதிகாரிகள் : கிடப்பில் போடப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து : வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க வேண்டும்.மேலும் : திறந்த நிலையில் பக்கவாட்டு சுவர் இல்லாமல் உள்ள மழை நீர் வடிகால்களை சீரமைத்து : அவற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மழைநீர் வடிகால்களை மூடுவதற்கு மாநகராட்சி தான் நடவடிக்கை எடுக்க முடியும். பள்ளிக்கரணை பாதாள சாக்கடை திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது.முதல் கட்டமாக 2023 ஏப்ரல் மாதம் : ஒரு சில தெருக்களுக்கு மட்டும் இணைப்பு கொடுக்கப்படும். அதைத் தொடர்ந்து : படிப்படியாக அனைத்து தெருக்களுக்கும் இணைப்பு கொடுக்கப்பட்டு : பணிகள் முடிவடையும்.இவ்வாறு அவர் கூறினார்.