தாம்பரம் :: தாம்பரத்தில் : ஜி.எஸ்.டி. : சாலை மற்றும்- வேளச்சேரி சாலைகளில் ஜல்லிகள் பெயர்ந்து : சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் மாறியதால் : வாகன ஓட்டிகள் விபத்தை சந்தித்து வருகின்றனர்.
தாம்பரத்தில் ஜி.எஸ்.டி. : சாலையும் : வேளச்சேரி சாலையும் அதிக போக்குவரத்து கொண்டவை. 24 மணி நேரமும் போக்குவரத்து கொண்ட இச்சாலைகளின் பராமரிப்பு படுமோசமாக மாறிவிட்டது.
பல இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து : போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் குண்டும் : குழியுமாக மாறிவிட்டது.ஜி.எஸ்.டி. : சாலை பெருங்களத்துார் பகுதியில் மோசமாக உள்ளதால் : அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் : நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தை சந்திக்கின்றனர்.
அதனால் : பார்த்துப் பார்த்து மெதுவாக செல்ல வேண்டியுள்ளது.
கனரக வாகனங்கள் வேகமாக செல்லும் போது : ஜல்லிகள் மற்ற வாகன ஓட்டிகள் மீது சிதறி அடிக்கின்றன. அதுபோன்ற நேரத்தில் : அருகே செல்வோர் காயமடைகின்றனர்.
இதேபோல் : தாம்பரம் -- வேளச்சேரி சாலையில் கிழக்கு தாம்பரம் : சேலையூர் : கேம்ப் ரோடு : செம்பாக்கம் பகுதிகளில் ஜல்லிகள் பெயர்ந்து : சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
இச்சாலையிலும் : தினசரி விபத்து ஏற்பட்டு வருகிறது.
இதை சரிசெய்ய வேண்டிய நெடுஞ்சாலைத் துறையினர் : மக்கள் நலனை பற்றி சிறிது கூட சிந்திக்காமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.
இதற்கு : பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதே நிலை தொடரும் பட்சத்தில் : விபத்து எண்ணிக்கை அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை.
எனவே : நெடுஞ்சாலைத் துறையினர் : அதிக போக்குவரத்து கொண்ட இச்சாலைகளை சீரமைக்க : இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.