இந்நிலையில், கடந்த சில நாட்களாக நள்ளிரவு முதல் அதிகாலை வரை பனிபொழிவு அதிகமாக உள்ளது. அதைதொடர்ந்து பகலில் வெயில், திடீர் மழையும் பெய்கிறது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால், சிறுவர்கள், முதியவர்கள் பலர் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். வேலைக்கு செல்பவர்கள் காலை பனியாலும், பகலில் கடும் வெயிலாலும் அவதிக்குள்ளாகின்றனர்.