கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 839 மனுக்கள் வரப்பெற்றன. கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேற்று பொது மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் ரேஷன் அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நில அளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.கூட்டத்தில் மொத்தம் 839 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டு துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என, கலெக்டர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., (பொ) கிருஷ்ணன், தனித்துணை கலெக்டர் கற்பகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.