பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியை பாண்டியன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.பரங்கிப்பேட்டை அடுத்த கீழமணக்குடி ஊராட்சியில், பயணியர் நிழற்குடை இல்லாததால், கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பாண்டியன் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் 5.50 லட்சம் ரூபாய் ஒதுக்கினார்.அதற்கான, பூமி பூஜை நடந்தது. ஒன்றிய செயலர் ராசாங்கம் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் சமயசங்கரி மோகன் வரவேற்றார். பாண்டியன் எம்.எல்.ஏ., பணியை துவக்கி வைத்தார்.விழாவில், மாவட்ட இணை செயலர் ரங்கம்மாள், ஒன்றிய அவைத் தலைவர் ரங்கசாமி, மாவட்ட மீனவரணி செயலர் வீராசாமி, நகர செயலர் தமிழரசன், கூட்டுறவு வங்கி தலைவர் தன கோவிந்தராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்த ஜோதி சுதாகர், ரவி, பாஸ்கர், ஊராட்சி தலைவர் அஞ்சலி ஞானதேசிகன், கூட்டுறவு வங்கி துணை தலைவர் கோதண்டம், மகளிரணி பிரியா, இளைஞரணி செயலர் செழியன், கிளை செயலர் மதியழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.கிளை செயலர் மணிவண்ணன் நன்றி கூறினார்.