கடலுார்: கடலுார் அரசு மகளிர் பள்ளியில் 'வானவில் மன்றம்' துவக்கப்பட்டது.அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் துாண்டும் வானவில் மன்றத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, கடலுார் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், வானவில் மன்றம் துவக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார்.அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரி ராஜா முன்னிலை வகித்தனர். கடலுார் மாவட்டத்தில் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என, மொத்தம் 520 பள்ளிகளில் நேற்று வானவில் மன்றம் துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினால் 53,707 மாணவர்கள் பயன்பெறுவர் என, கலெக்டர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.