திருவூர்: திருவூர் பகுதியில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட இயக்குனர் சி.பானுமதி தலைமையில் வேளாண் நிலைய விஞ்ஞானிகள் திருமழிசை பகுதியில் 'ட்ரோன்' வாயிலாக மூலம் வயல்களில் நானோ யூரியா உரம் தெளிக்கும் செயல் விளக்கம் நடந்தது.
இந்த நானோ யூரியா தெளிப்பதால் பயிர்களுக்கு 80 சதவீதம் நைட்ரஜன் கிடைக்கும். ஏக்கருக்கு 500 மி.லி., நானோ யூரியா அல்லது 2.4 மி.லி., தண்ணீர் என்ற அளவில் நெல் நடவு செய்த 20 - 25 நாட்களிலும் தெளிக்க வேண்டும்.
பின், இரண்டாவது முறையாக முதல் தெளிப்பிலிருந்து 20 - 25 நாட்களிலும், நானோ யூரியா தெளிப்பதன் மூலம் தேவையான தழைச்சத்து கிடைப்பதுடன் மண் வளமும் பாதுகாக்கப்படுகிறது.
மேலும், சுமார் 10 நிமிடங்களில் ஒரு ஏக்கரில் மருந்து தெளித்து விடலாம். இதன் வாயிலாக ஆட்கூலி, இடுபொருள் செலவு, நேரம் மிச்சப்படுகிறது என, வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்த செயல் விளக்கத்தை திருவூர் வேளாண் அறிவில் நிலைய விஞ்ஞானிகள் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.