ராயபுரம், ராயபுரம், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. மின்ட், மண்ணடி, பாரிமுனை, புளியந்தோப்பு, வியாசர்பாடி செல்வோர் இந்த ரயில்வே சுரங்கப்பாதையை பயன்படுத்துகின்றனர்.
இந்த சுரங்கப்பாதையின் அருகிலுள்ள ராயபுரம் குடிநீர் நிலையத்தில் இருந்து, பக்கவாட்டு சுவர் வழியாக கசிந்து, சுரங்கப்பாதையில் நீரூற்று போன்று தண்ணீர் வெளியேறி குளம் போல் தேங்குகிறது. மேலும், தேங்கியுள்ள நீரால், சுரங்கப்பாதை பழுதடைந்து வருகிறது.
அதேபோல், சுரங்கப்பாதையில் பல இடங்களில் பள்ளம் விழுந்து, கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் அபாயகரமாக காட்சியளிக்கிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள், தொடர் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே சுரங்கப்பாதையில் கசியும் நீரை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.