மதுராந்தகம்:செய்யூர் அடுத்த கடுக்களூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் மகன் ஷாருக்கான், 22.
இவர், மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் இருவர் என, மூன்று பேர், யமஹா ஆர்15 இருசக்கர வாகனத்தில், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பாக்கம் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த ஷாருக்கான், நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அதே நேரத்தில், பின் வந்த லாரி ஷாருக்கான் மேல் ஏறியது. இதில், ஷாருக்கான், சம்பவ இடத்திலேயே பலியானார்.
மற்ற இருவரும் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீசார், பிரதேத்தை கைப்பற்றி, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின், அவர்களின் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்து குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.