செங்கல்பட்டு:மதுராந்தகம் அடுத்த அரசர்கோவில் பகுதியைச் சேர்ந்த, 4 வயது சிறுமி, கடந்த 2016ம் ஆண்டு, ஜனவரி மாதம் 13ம் தேதி, தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டி, 42. என்பவர், சிறுமியை பாலாற்று பகுதியில் குளிப்பதற்காக அழைத்துச்சென்றார். அங்கு, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தார்.
இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரையடுத்து, படாளம் போலீசார், அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
அதன்பின், ஜாமினில் வெளியே வந்தார். இவ்வழக்கு, செங்கல்பட்டு 'போக்சோ' நீதிமன்றத்தில், நீதிபதி தமிழரசி முன், நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு விசாரணை முடிந்து, குற்றம் நிருபிக்கப்பட்டதால், முனியாண்டிக்கு, பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி தமிழரசி, நேற்று உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
அதன்பின், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து, மாவட்ட சிறையில் போலீசார் அடைத்தனர்.