மானாமதுரை:தினம் தினம் கொலை கொள்ளை நடக்கும் தமிழகம் தான் அமைதி பூங்காவா என பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச். ராஜா கேள்வி எழுப்பினார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தஞ்சாக்கூரில் அவர் கூறியதாவது:
அரியலூரில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாகவும் இதனால் சிலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் தினம்,தினம் கொலைகள், கொள்ளைகள், திருட்டுக்கள் நடக்கின்றன. கோவையில் தற்கொலை படை தாக்குதல் நடந்துள்ளது. பிரிவினைவாதம், தேசவிரோத சக்திகள் தலைவிரித்தாடுகின்றன. பிரிவினைவாதம், தனித் தமிழ்நாடு என பேசிய திருமாவளவனை கைது செய்ய வேண்டும்.
தி.மு.க., கூட்டணி கட்சிகள் பல்வேறு விஷயங்களில் மக்களை திசை திருப்பி கொண்டிருக்கின்றன். கவர்னரை ஒருமையில் பேசிய தி.மு.க., ஆர்.எஸ்.,பாரதியை வன்மையாக கண்டிக்கிறேன். தி.மு.க.வை வேரோடும், வேரடி மண்ணோடும் அழிக்க பா.ஜ., அனைத்து வேலைகளையும் செய்யும், என்றார்.