கள்ளக்குறிச்சி : உளுந்துார்பேட்டையில் மாற்றுத் திறன் மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.
வரும் டிசம்பர் 3ம் தேதி உலக மாற்றுத் திறனாளி தினம் நடைபெற உள்ளது. அதனையொட்டி, மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.
போட்டிகளை வட்டார கல்வி அலுவலர் முத்துசாமி துவக்கி வைத்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருள்செல்வம் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில், லெமன் வித் ஸ்பூன், ஓட்டப்பந்தயம், தண்ணீர் நிரப்புதல், தவளை ஓட்டம், பலுான் உடைத்தல், பன் உண்ணுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.
போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்றுனர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
சிறப்பு பயிற்றுனர் ஜானகிராமன் நன்றி கூறினார்.