பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கராசு மகன் ரவிச்சந்திரன், 45; ஒயர்மேன். இவர், பண்ருட்டி கிழக்கு உதவி மின்பொறியாளர் அலுவலக ஒயர்மேனாக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று காலை 11:00 மணியளவில், திருவதிகை அசோக் நகரில் உள்ள டிரான்ஸ்பார்மரை பரிசோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத வகையில் உயர் மின்னழுத்த கம்பியில் இருந்து மின்சாரம் ரவிச்சந்திரன் மீது தாக்கியது.
இதில் பலத்த தீக்காயம் அடைந்த ரவிச்சந்திரன், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பின் மேல்சிகிச்சைக்கு கடலுார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.