மதுரை : 'பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படும்' என, வேளாண் இணை இயக்குநர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் 2 லட்சத்து 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து உதவி இயக்குநர் அலுவலகங்களில் தேக்கு, வாகை, நெல்லி, புங்கம், மகாகனி, செஞ்சந்தன மரக்கன்றுகள் தயாராக உள்ளன.
மரக்கன்றுகளை தேர்ந்தெடுத்து வயல்கள், வரப்போரங்களில் நடலாம். பருவமழையில் மரக்கன்றுகள் உயிர்பிடித்து வளர ஆரம்பிக்கும்.
உழவன் செயலியில் பதிவு செய்து சிட்டா, ஆதார், வங்கி பாஸ்புக் நகல், போட்டோவுடன் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஏக்கருக்கு 200 வீதம் அதிகபட்சமாக எக்டேருக்கு 500 மரக்கன்றுகள் பெறலாம், என்றார்.