கோவை : தென் மாவட்ட கொள்ளையர் இருவர், கோவை கோர்ட்டில் சரணடைய 'கெடு' விதிக்கப்பட்டுள்ளது.
ஜாமினில் விடுவிக்கப்பட்ட இருவரும், விசாரணையின் போது கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானதால் 'பிடிவாரன்ட்' பிறக்கப்பட்டது. இருவரையும் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்க கோரி, போலீஸ் தரப்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
விசாரித்த மாஜிஸ்திரேட், 'ஜன., 30க்குள் இருவரும் 'சரண்டர்' ஆகாவிட்டால், அறிவிக்கப்படும் குற்றவாளியாக உத்தரவிடப்படும்' என்று அறிவித்துள்ளார்.