திருப்பூர் : கோவை-சேலம் 'மெமு' ரயில் நான்காவது முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால் நான்கு மாவட்ட பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆக.,-செப்., மாதம் ரயில் இயங்கியது. அக்., 13 முதல், 30 வரை இரண்டாவது முறையாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. நவ., முதல் மீண்டும் ரயில் இயங்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காவேரி-ஈரோடு இடையே பொறியியல் பணியால், அக்., 31 முதல் நவ., 29 வரை, 30 நாட்களுக்கு மூன்றாவது முறையாக இந்த ரயில் ரத்து செய்யப்பட்டது.
நேற்றுடன் ரத்து அறிவிப்பு முடிவடைவதால் டிச., முதலாவது ரயில் இயங்குமென என, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட பயணிகள் காத்திருந்தனர். ஆனால், சேலம் யார்டில் பணிகள் நடப்பதாக கூறி, நவ., 1, 2 மற்றும், 3ம் தேதிகளில் என, நான்காவது முறையாக கோவை-சேலம் மெமு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.