அரசு அலுவலகங்களில் தமிழில் ரசீது - நகராட்சி துறை உத்தரவு 
Added : நவ 30, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



மதுரை : 'தமிழ் வளர்ச்சித் துறை அறிவுரைப்படி அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் உட்பட அரசு அலுவலங்களில் வழங்கும் ரசீதுகளில் தகவல்களை தமிழில் அச்சிட வேண்டும்' என, நகராட்சி நிர்வாக துறை உத்தரவிட்டுள்ளது.



மதுரை முத்துப்பட்டி இந்தியன் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மோகன் சில மாதங்களுக்குமுன்மதுரை மாநகராட்சியில் வீட்டு வரி, குடிநீர் கட்டணம் செலுத்தினார். அப்போது வழங்கிய ரசீதில் தகவல்கள் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தது.

தமிழக ஆட்சி மொழி சட்டத்தில் அரசு அலுவலகங்களில்குறிப்பிட்ட இனங்களைதவிர அனைத்தும் தமிழில் அச்சிடப்படவேண்டும் என்ற உத்தரவு உள்ளது. உத்தரவை மீறி மாநகராட்சி செயல்படுவதாக தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனருக்கு மோகன் புகார் அனுப்பினார்.

இது குறித்து விசாரித்த தமிழ் வளர்ச்சித்துறை மதுரை மாநகராட்சி உட்பட தமிழகம் முழுவதும் இந்த ரசீது ஆங்கிலத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்தது. நகர்ப்புற நிர்வாக இயக்குனருக்குகடிதம் அனுப்பி, தங்கள் இணையதளத்தில் தமிழில் தட்டச்சு செய்யும்படி மென்பொருள் வடிவமைக்க வலியுறுத்தியது.

அதை ஏற்ற நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, மாநகராட்சி, நகராட்சி மண்டல இயக்குனர்கள் அனைத்து ரசீதுகளிலும் தகவல்களைதமிழில் அச்சிட்டு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X