கோவை : கோவையில் போலீஸ் பாதுகாப்பு மற்றும் வாகன தணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், முக்கிய சாலை சந்திப்புகளில், 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாநகரில், 30 இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கையும் முழு வீச்சில் நடந்து வருகிறது.
'கோவையில் அக்., 23ல் நடந்த கார் குண்டு வெடிப்பை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. இந்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள், டிச., 6 வரை தொடரும்' என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.