கரூர், நவ. 30-
காவிரி ஆற்றில் மாயனுார் கதவணைக்கு, தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.
கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 16 ஆயிரத்து, 722 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 22 ஆயிரத்து, 694 கன அடியாக தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. டெல்டா பாசன சம்பா சாகுபடி பணிக்காக, காவிரியாற்றில், 21 ஆயிரத்து, 374 கன அடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்காலில் வினாடிக்கு, 1,320 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 522 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 626 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. 90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 89.47 அடியாக இருந்தது. அமராவதி அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு, 438 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில், 250 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
அணைப்பகுதிகளில், 3 மி.மீ., மழை பெய்துள்ளது. கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு தண்ணீர் வரத்து, 306 கன அடியாக இருந்தது.
நங்காஞ்சி அணை
திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு வடகாடு மலைப்பகுதிகளில் மழை காரணமாக நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 42 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து, நான்கு பாசன கிளை வாய்க்காலில் தலா, 10 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 39.37 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 39.34 அடியாக இருந்தது.
ஆத்துப்பாளையம் அணை
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்
பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 26 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பொன்னனியாறு அணை
கடவூர் அருகே உள்ள பொன்னனியாறு அணைக்கு, நேற்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 51 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 27.93 அடியாக இருந்தது.