கரூர், நவ. 30-
மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி கோரி, சி.ஐ.டி.யு., தொழிலாளர்கள்
சங்கத்தினர், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆறுகளில் அரசின் அனுமதியோடு மணல் அள்ளி உள்ளூர் கட்டுமான பணிகளுக்கு அளித்து வந்தோம். இதன் மூலம் நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பயனடைந்து வந்தனர். தற்போது மணல் அள்ள அனுமதியில்லலை என்பதால் வாழ்வதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மாடுகளை பராமரிக்க சிரமப்பட்டு வருகிறோம். மாவட்டத்தில் 2 குவாரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டதால்
அப்பணிகள் முடங்கின.
தற்போது இயல்பு நிலை ஏற்பட்டுள்ளதால் குவாரிகளை உடனடியாக திறந்து மாட்டு வண்டியில் தொழிலாளர்கள் மணல் அள்ள அனுமதி வழங்கி, வாழ்வாதாரத்தை காக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.