கரூர், நவ. 30-
கரூர் அரசு கலை கல்லுாரியில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் கற்றல் உபகரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், கலெக்டர் பிரபுசங்கர் தலைமை
வகித்து பேசியதாவது:
'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் 21 மாணவர்கள், கரூர் அரசு கலை
கல்லுாரியிலும், 3 மாணவர்கள் அரவக்குறிச்சி அரசு கலை கல்லுாரியிலும், 6 மாணவர்கள் குளித்தலை அரசு கலை கல்லுாரியிலும், ஒரு மாணவர் வேடசந்துார் அரசு கலை கல்லுாரியிலும், 3 மாணவர்கள் தனியார் கேட்டரிங் கல்லுாரியிலும் சேர்க்கப்பட்டு உயர் கல்வி பயில வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர், பேசினார்.
தொடர்ந்து, மாணவர்களுக்கு கற்றல் உபகரண நிதி வழங்கப்பட்டது.