குளித்தலை, நவ. 30-
குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார கலை திருவிழா போட்டிகள் நேற்று தொடங்கியது. பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பத்மாவதி தலைமை வகித்தார்.
எம்.எல்.ஏ., மாணிக்கம் போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் குளித்தலை வட்டாரத்தில் 29 பள்ளிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் வட்டார போட்டியில் பங்கேற்றுள்ளனர். விழாவில் நகராட்சி தலைவர் சகுந்தலா பல்லவிராஜா,
பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரேவதிபாஸ்கர், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் வளர்மதி தலைமையில் கலை திருவிழா போட்டிகள் தொடங்கின. லாலாப்பேட்டை சந்தைப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கலை திருவிழா போட்டிகளை எம்.எல்.ஏ., மாணிக்கம் தொடங்கி வைத்தார். விழாவில், வட்டார கல்வி அலுவலர்கள் மீனா,
செந்தில்குமாரி, மனோகரன், தலைமை ஆசிரியர்கள் வைரமூர்த்தி, மாதேஸ்வரன், சங்கர் உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.