கோவை இன்று முதல் ஆதார் சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு, புதிய கட்டண முறையை, 'இந்தியா போஸ்டல் பேமென்ட் பேங்க்' அமல்படுத்துகிறது.
தபால்துறையின் அங்கமான, 'இந்தியா போஸ்டல் பேமென்ட் பேங்க்' (ஐ.பி.பி.பி.,) ஆதார் சார்ந்த பரிவர்த்தனை சேவையை, 2019 முதல் செயல்படுத்தி வருகிறது.
இருப்புத்தொகை அறிதல், பணம் எடுத்தல் மற்றும் அனுப்புதல் போன்ற அடிப்படை பரிவர்த்தனை சேவை வழங்கப்படுகிறது.
ஆதார் சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு கட்டண முறையை, ஜூன் மாதம் ஐ.பி.பி.பி., அறிமுகப்படுத்தியது.
இதில், மாதத்துக்கு மூன்று பரிவர்த்தனை இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இச்சேவைக்கான கட்டண முறையை ஐ.பி.பி.பி., மீண்டும் மாற்றியமைத்துள்ளது.
இதன்படி, ஐ.பி.பி.பி., வாடிக்கையாளர் இல்லாத மற்ற வங்கி கணக்குகளுக்கு, மாதம் ஒரு முறை மட்டுமே இலவசமாக பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.
வரம்புக்கு மேல், பணம் எடுக்க மற்றும் டிபாசிட் செய்ய, ஜி.எஸ்.டி.,யுடன் 20 ரூபாய், இருப்புத்தொகை அறிய, ஐந்து ரூபாய் வசூலிக்கப்படும்.
இந்நடைமுறை, இன்று முதல் நடைமுறைக்கு வரும் என, ஐ.பி.பி.பி., அறிவித்துள்ளது.