கோவை : கோவை வேளாண் பல்கலையின் தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தொழில்நுட்ப மையம் மற்றும் டில்லி இந்திய உயிர் தொழில்நுட்ப கூட்டமைப்பு சார்பில், 'வேளாண்மையில் மரபணு திருத்தத்திற்கான வாய்ப்புகள், செயல்பாட்டுக்கொள்கைகள்,' என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது. பல்கலை பதிவாளர் தமிழ்வேந்தன் தலைமை வகித்து கருத்தரங்கை துவக்கிவைத்தார்.
இக்கருத்தரங்கில், மருத்துவம் மற்றும் வேளாண் துறையில் மரபணு திருத்தத்திற்கான முக்கியத்துவம், உணவு உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனில் ஏற்பட்டுள்ள இடைவெளி, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை வணிகமயமாக்குதல் உள்ளிட்ட, பல்வேறு தலைப்புகளில், விஞ்ஞானிகள் விளக்கமளித்தனர்.
இதில், தாவர உயிர் தொழில்நுட்பவியல் துறை தலைவர் கோகிலாதேவி, பிற துறைத்தலைவர்கள், வல்லுனர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்றனர்.