அரபு நாடுகளுக்கு ஜவுளி அமோக ஏற்றுமதி 'டாப் - 5' நாடுகளில் இந்தியா 2வது இடம்
Updated : டிச 01, 2022 | Added : நவ 30, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

திருப்பூர்:வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள தால், அரபு நாடுகள் ஜவுளி இறக்குமதியில், இந்தியாவின் பங்களிப்பு, 31 சதவீதமாக அதிகரித்துள்ளது.

வர்த்தக உறவுகளை வலுப்படுத்த, ஐக்கிய அரபு நாடுகளுடன் இந்தியா பொருளாதார வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. இதனால், இரு நாடுகளிடையே ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் எதிர்பாராத அளவுக்கு வளர்ச்சி கண்டிருக்கிறது.

இந்தியாவின் ஐக்கிய அரபு நாடுகளுக்கான ஜவுளி ஏற்றுமதி, 2020ல், 11 ஆயிரத்து 378 கோடி ரூபாயாக இருந்தது; 2021ல், 14 ஆயிரத்து 409 கோடியாக உயர்ந்தது.



மூன்றாம் இடம்




வர்த்தக மேம்பாட்டு ஆய்வறிக்கையில், ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் 'டாப் - 5' நாடுகளில் இந்தியா இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.

மொத்தம், 43.2 சதவீத பங்களிப்புடன் சீனா முதல்இடத்திலும், 29.6 சதவீதத்துடன் இந்தியா இரண்டாமிடத்திலும் இருக்கிறது. வங்கதேசம், 5.2 சதவீத பங்களிப்புடன் மூன்றாம்இடத்தில் உள்ளது.



அதிகரிக்க வாய்ப்பு




கடந்த ஆண்டின், மொத்த பின்னலாடை இறக்குமதி, 3,493 கோடி ரூபாயில், இந்தியாவின் பங்களிப்பு, 1,370 கோடி ரூபாய். திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் என்பது, நாட்டின் ஜவுளி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்ரமணியன் கூறியதாவது:

ஐக்கிய அரசு நாடுகள் பருத்தி நுாலிழையிலான பின்னலாடைகளையே பெரிதும் விரும்புகின்றன. திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் இருப்பதால், சிக்கலான சூழலிலும் அந்நாடுகளுடன் ஏற்றுமதி வர்த்தகம் தடையில்லாது தொடர்கிறது. ஆஸ்திரேலியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறியுள்ளது.

பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்து வரியில்லாத ஒப்பந்தம் நிறைவேறினால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில், 20 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X