புன்செய்புளியம்பட்டி : தொடர் மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்துள்ளது. இதனால் கிலோ, 2,800 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த சில நாட்களாக, பவானிசாகர் சுற்று வட்டார பகுதிகளில், கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. பரவலாக தொடர் மழையும் பெய்கிறது.
இதனால் மல்லிகை செடிகளில் மொட்டுகள் பனியால் கருகி வருகின்றன. 1 ஏக்கர் மல்லிகை தோட்டத்தில் சராசரியாக, 20 கிலோ பூக்கள் பறித்து வந்த நிலையில், பனிப்பொழிவால், 2 கிலோவுக்கும் குறைவாகவே கிடைக்கிறது.
நேற்றைய நிலவரப்படி மல்லிகை பூ கிலோ, 2,800 ரூபாய்க்கு விற்பனையானது.