மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் நகரில் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகள் அங்கும், இங்கும் சுற்றி திரியும்போதும், ரோட்டில் செல்வோரை முட்டி தள்ளுகிறது. கடந்த வாரம் ஒரு பெண் படுகாயமடைந்தார். இதனால், நகரில் சுற்றும் மாடுகளை பிடிக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் மூன்று நாட்களாக ஈடுபட்டு வருகிறது. இதில் மாடுகளை பிடிக்கும் பணிகளில் ஈடுபட்ட ஐந்துக்கும் மேற்பட்டவர்கள், காயமடைந்தனர்.
நகராட்சி கமிஷனர் வினோத் கூறுகையில்,"முதல் நாள் எட்டு மாடுகள் பிடிக்கப்பட்டன. மாட்டின் உரிமையாளர்களை வரவழைத்து, மாடுகளை வீட்டில் கட்டி வைத்து வளர்க்க அறிவுறுத்தப்பட்டது.
இரண்டாம் நாள் கிழங்கு மண்டிகள் வளாகம், ஊட்டி ரோட்டில் மூன்று மாடுகள் பிடிபட்டன. இந்த மாடுகளை தலைமை நீருந்து நிலையத்தில் கட்டி வைக்கப்பட்டது. மாட்டின் உரிமையாளரை வரவழைத்து, ஒவ்வொரு மாட்டுக்கு தலா, 5 ஆயிரம் விதம், 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது' என்றார்.