விசைத்தறி தொழிலில் பின்னடைவு: தொழிலாளர்கள் வேலையிழப்பு
Updated : டிச 01, 2022 | Added : டிச 01, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

பல்லடம்: விசைத்தறி தொழிலில் ஏற்பட்ட பின்னடைவால் தொழிலாளர்கள் பலர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர், கோவை மாவட்டங்களில், 2 லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் மூலம், தினசரி ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தியாகின்றன. சமீப நாட்களாக, ஜவுளித் தொழிலில் ஏற்பட்டுள்ள பின்னடைவால் காடா துணி உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது.latest tamil newsதிருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:
ஜவுளித் தொழிலில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால், குறைவான விசைத்தறிகளே இயங்குகின்றன. இச்சூழலில், பாவு நுால் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளதால், விசைத்தறி துணி உற்பத்தி மேலும் குறையக்கூடும்.
பல லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் அபாயத்துடன், தொழிலாளர்கள் மாற்று தொழிலுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சு, நுால் விலை ஏற்ற, இறக்கங்கள் மற்றும் மின் கட்டண உயர்வாலும் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜவுளி தொழிலை பாதுகாக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.உற்பத்தி குறைப்பு!
ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறுகையில்,''பஞ்சு, நுால் விலை ஏற்ற இறக்கங்களால், துணிகளின் விலையை நிர்ணயிக்க முடிவதில்லை. வட மாநிலங்களில் துணிகள் விற்பனை குறைந்துள்ளது. பஞ்சு, நுால் விலையை சீராக்கவும், மின் கட்டணத்தை குறைக்கவும் மத்திய, மாநில அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்தி வருகிறோம். நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதால், மார்க்கெட் நிலவரம் பழைய நிலைக்கு திரும்பும் வரை, உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
V GOPALAN - chennai,இந்தியா
01-டிச-202210:35:44 IST Report Abuse
V GOPALAN This week Stalin said Karur and Kanchi will be the next Textile Hub. It shows he is totally out of control. He just speak whatever his PA gives useless Data
Rate this:
Cancel
V GOPALAN - chennai,இந்தியா
01-டிச-202210:31:47 IST Report Abuse
V GOPALAN Let us learn and Speak Hindi and go to Surat and Gujarat and leave happily. There 3 quality Roti is just 6 Rupees Vada Phav id Rs. 5 Tea Rs. 5
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
01-டிச-202209:39:22 IST Report Abuse
raja எங்கே பாடுங்க ஸ்டாலிந்தான் வந்தாரு விடியல் தான் தந்தாரு....ஆகா ஓஹோ அனுபவிக்க மக்கா கேவலம் ரூபாய் 2000 துக்கு ஆசை பட்டு விடியல் வருமுண்ணு நம்பி உந்தலையில் நீயே மண்ணை போட்டு கிட்டேயே தமிழா....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X