ஈரோடு, டிச. 1-
ஈரோட்டில், போர்வெல்லில் இருந்து அதிகளவில் புகை கிளம்பியதால், பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு, இந்திரா நகரில், யாசர் அராபத் என்பவர், வில்லரசம்பட்டியில் வசிக்கும் திருநாவுக்கரசு என்பவருக்கு சொந்தமான வீட்டில், வாடகைக்கு வசித்து வருகிறார். நேற்று காலை, 11:45 மணிக்கு, வீட்டில் உள்ள போர்வெல் மோட்டாரை இயக்கி உள்ளனர். அப்போது, போர்வெல்லில் இருந்து அதிகளவில் புகை கிளம்பி வெளியேறி உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த யாசர் அராபத் குடும்பத்தினர், ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் சம்பவ இடத்து விரைந்து வந்து, புகை கிளம்பிய போர்வெல்லுக்குள் சிறிதளவு தண்ணீரை ஊற்றினர். பின் புகை வெளியேறுவது அடங்கியது. கடந்த, 2 மாதமாக போர்வெல் மோட்டாரை இயக்காமல், தற்போது இயக்கியதால், போர்வெல்லில் படிந்திருந்த துாசி, மண் துகள்கள் புகையாக வெளியேறியதாக, தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.