சத்தியமங்கலம், டிச. 1-
இ.கம்யூ., கட்சியின் சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றியக்குழு உறுப்பினர் கனகவள்ளி தலைமையில், நேற்று நடந்தது. இதில், சத்தியமங்கலம் அருகே, செண்பகபுதுார் பகுதி மக்களின் வாழ்வாதாரம் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பாகும். கீழ்பவானி பாசன பகுதியான இப்பகுதியில், 5,000த்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கால்நடைகள் நோய் வாய்ப்பட்டால், மருத்துவம் பார்ப்பதற்கும், சினை ஊசி போடுவதற்கும் அருகில்
கால்நடை மருத்துவமனை
இல்லாததால், பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
அவசரத்திற்கு கால்நடைகளை கொண்டு செல்ல வேண்டுமானால், 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள உக்கரம் அல்லது உத்தண்டியூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
எனவே, செண்பகபுதுாரில் ஒரு கால்நடை மருத்துவமனையை அமைக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம், மாவட்ட துணை செயலாளர்கள் வெங்கடாசலம், சக்திவேல், ஒன்றிய செயலாளர் நடராஜ், ஒன்றிய துணை செயலாளர்கள் பொங்கியண்ணன், ரவிச்சந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் சிவராஜ் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.