ராசிபுரம், டிச.1-
நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., தற்காலிகமாக வாட்ச்மேன் பரமசிவம் இறந்ததில் சந்தேகம் இருப்பதால், சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட, வி.சி., கட்சியினரும் வலியுறுத்தி வந்தனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று ராசிபுரம் பஸ்நிலையம் முன் போராட்டம் நடத்த அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. அதையும் மீறி வி.சி., கட்சியினர் போராட்டம் நடத்த முயன்றபோது, போலீஸ் எஸ்.ஐ., சண்முகம், வி.சி., மாவட்ட பொருளாளர் அரசன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, போராட்டம் கைவிடப்பட்டது. இந்
நிலையில், நிர்வாகி அரசனை, எஸ்.ஐ., சண்முகம் சட்டையை பிடித்து தள்ளி, தாக்கியதாக, வி.சி., கட்சியினர் போலீசில் புகார் அளித்தபோது, ராசிபுரம் போலீசார் வாங்க மறுத்தனர். இதையடுத்து போலீஸ் ஸ்டேஷனில் உட்கார்ந்து அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர். பின் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, எஸ்.ஐ., சண்முகம் மீதான புகாரை பெற்றுக்கொண்டு, மனு ரசீது வழங்கியதால், அனைவரும் கலைந்து சென்றனர்.