சேந்தமங்கலம்:கொல்லிமலையில், கரடி தாக்கியதில் விவசாயி படுகாயம் அடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வளப்பூர்நாடு ஓலையாறு பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன், 45.
இவர், நேற்று காலை தன் தோட்டத்திற்கு நடந்து சென்றபோது, முட்புதரில் பதுங்கிருந்த கரடி, ராஜேந்திரன் மீது பாய்ந்து, அவரை தாக்கியது.
இதில், அவர் படுகாயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கரடியை விரட்டினர்; செம்மேடு அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
வன அலுவலர் சுப்புராயன் தலைமையிலான வனத்துறையினர், ஆய்வு செய்து வருகின்றனர். விவசாயியை கரடி தாக்கியது, கொல்லிமலை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.