ஆவடி, ஆவடி, காமராஜர் நகர் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் யுவராஜ், 60; சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இவரது தம்பி சந்திரசேகர், 55. திருமணமாகாத இவர், மனநிலை பாதிக்கப்பட்டவர்.
இவர் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, வீட்டருகே ஓடிய போது, கிணற்றில் தவறி விழுந்தார்.
அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்க முயன்றனர். முடியாததால் ஆவடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர் ஒருவர், கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி, முதியவர் இடுப்பில் கயிறு கட்டி சாமர்த்தியமாக அவரை உயிருடன் மீட்டார்.