சென்னைசென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் முனியாண்டி, 42. இவர், சென்ட்ரலில் உள்ள, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் இதர இடங்களில், மொபைல் போன் திருடுவதையே தொழிலாக செய்து வந்தார். கைதான இவர், சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்தார்.
நவ.,29ல், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், பெண் டாக்டர் ஒருவரின், 'ஐ போனை' திருடி தப்பினார்.
இவரை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை போலீசார் நேற்று கைது செய்தனர். திருடிய, ஐ போனை, மருது என்பவரிடம் விற்றுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனாம்பேட்டை:
எழும்பூர் பகுதி விடுதி ஒன்றில் தங்கி, வேலை பார்ப்பவர் அமல் முகமது, 20.
இவர், கடந்த மாதம் 19ல், தேனாம்பேட்டை, கதீட்ரல் சாலை வழியாக நடந்து சென்றார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், கத்தியை காட்டி மிரட்டி, அமல் முகமதுவிடம் இருந்த இரண்டு மொபைல் போன்களை பறித்து தப்பினர்.
தேனாம்பேட்டை போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவை ஆய்வு செய்து, இவ்வழக்கில் தொடர்புடைய 'ஸ்பீடு' அஜீத்குமார், 20, மற்றும் 17 வயது சிறுவனை, நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, இரண்டு மொபைல் போன்கள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.