சென்னை:தொடக்க கல்வியில் சிறப்பாக செயல்பட்ட, 114 அரசு பள்ளிகள், சிறப்பு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு, ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும்.
நடப்பு கல்வி ஆண்டில், மாநிலம் முழுதும், 38 மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட, 114 தொடக்க பள்ளிகள், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
உள்கட்டமைப்பு வசதி, கணினி வழி கல்வி, ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், விருதுக்கான பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
விருது வழங்கும் விழா, சென்னையில் நாளை நடக்கிறது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் விருதுகளை வழங்குகிறார்.