திருவண்ணாமலை:திருவண்ணாமலையில், பகவான் யோகிராம் சுரத்குமாரின், 104வது ஜெயந்தி விழாவில், ஏதாதச ருத்ர பாராயண சஹித ருத்ர ஹோமம் நடந்தது.
திருவண்ணாமலையில், பகவான் யோகிராம் சுரத்குமார் ஆசிரமத்தில், 104வது ஜெயந்தி விழா, நேற்று இரண்டாவது நாளாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, காலையில், ஏகாதச ருத்ர பாராயண சஹித ருத்ர ஹோமம், வசோதாரா பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டு, பகவான் லிங்கத்திற்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து, நாம சங்கீர்த்தன பஜனை, விதுாஷி அர்ச்சனா, விதுாஷி ஆரத்தி குழுவினரின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.
இரவு, பகவான் யோகிராம் சுரத்குமார் உற்சவமூர்த்தி, வண்ண மலர்களால் அலங்கரித்த பல்லக்கில், ஆசிரமம் உள்ளே வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பகவானை வழிபட்டனர்.
நிகழ்ச்சியில், ஆஸ்ரம அறங்காவர்கள் டாக்டர் ராமநாதன், மாதேவகி, ராஜேஸ்வரி, சுவாமிநாதன், குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.