காரைக்கால் : பணியின் போது இறந்த நகராட்சி ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட சுகாதார பணியாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முருகன், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: காரைக்கால் நகராட்சியில் சுகாதார ஊழியர்கள் பல விதங்களில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பல மாதம் சம்பள பாக்கி உள்ளது. 20 ஆண்டிற்கு முன் தற்காலிக அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஜி.பி.எப் பிடித்தம் செய்யாததால், பென்ஷன் முதலிய உரிமைகள் கிடைக்காமல் பெரும் கஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர். பணியின் போது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு பல ஆண்டுகளாக வேலை வழங்காமல் உள்ளது. அவர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும். தேசிய ஆணையத்தின் பரிந்துரைப்படி, சுகாதார ஊழியர்கள் அனைவருக்கும் சிவப்பு ரேஷன் கார்டு. சீருடை அலவன்ஸ் கணக்கிட்டு வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.