பண்ருட்டியில் அரசு பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்: ஊழியர்கள் 'ஸ்டிரைக்'
Added : டிச 02, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



பண்ருட்டி : பண்ருட்டியில் அரசு பஸ் கண்டக்டரை தாக்கியவர்களை கைது செய்யக் கோரி, போக்குவரத்துக் கழக ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால், இரண்டரை மணி நேரம் பஸ்கள் இயங்கவில்லை.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி, செக்குமேட்டு தெருவை சேர்ந்தவர் தரண்சிங்,34; தமிழக அரசு பஸ் கண்டக்டர். இவர், பண்ருட்டி - விழுப்புரம் செல்லும் (தடம் எண் - 2 சி) அரசு பஸ்சில் நேற்று பணியில் இருந்தார்.

மதியம் 1:00 மணியளவில் பஸ்சை டிரைவர் மாயகிருஷ்ணன் பண்ருட்டி பஸ் நிலையத்திற்குள் ஓட்டி வந்து, விழுப்புரம் பஸ்கள் நிற்கும் இடத்தில் நிறுத்த முயன்றனர். அப்போது அங்கிருந்த பைக் இடையூறாக இருந்ததால், அதனை எடுக்குமாறு கண்டக்டர் தரண்சிங் கூறினார்.

பைக்கை நிறுத்தியிருந்த பண்ருட்டி, அம்பேத்கர் நகரை சேர்ந்த தமிழ்செல்வன், தரண்சிங்கிடம் வாக்குவாதம் செய்து, ஆபாசமாக திட்டினார். இதனை கண்டித்த தரண்சிங்கை, தமிழ்செல்வன் உள்ளிட்ட 3 பேர் சேர்ந்து தாக்கினர்.

இதனையடுத்து பஸ்சை பண்ருட்டி போக்குவரத்துக் கழக பணிமனைக்கு ஓட்டிச் சென்றனர். அரசு மருத்துவமனை எதிரில் சென்றபோது, தமிழ்செல்வன் உள்ளிட்ட 6க்கும் மேற்பட்டோர் பஸ்சை வழிமறித்து, கண்டக்டர் தரண்சிங்கை மீண்டும் சரமாரியாக தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர். காயமடைந்த கண்டக்டருக்கு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்த பண்ருட்டி அரசு போக்குவரத்துக் கழக டிரைவர், கண்டக்டர்கள், ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர், மதியம் 1:20 மணிக்கு வி.கே.டி., தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம், பண்ருட்டி போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து, மறியலை கைவிட்டனர். ஆனால் பஸ்களை இயக்க மறுத்து, பஸ்களை பஸ் நிலையம் மற்றும் பணிமனையில் நிறுத்தினர்.

தொடர்ந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையை போக்குவரத்து ஊழியர்கள் முற்றுகையிட்டு, தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தினர். அவர்களிடம் பண்ருட்டி டி.எஸ்.பி., சபியுல்லா பேச்சுவார்த்தை நடத்தினார். கண்டக்டரை தாக்கியவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இரவுக்குள் கைது செய்வதாக உறுதியளித்தனர்.

இதனையடுத்து மாலை 4:00 மணியளவில், பஸ்களை இயக்குவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், இன்று போராட்டத்தை தொடருவோம் என கூறி, ஊழியர்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இச்சம்பவம் காரணமாக, பண்ருட்டியில் இருந்து அரசு பஸ்கள் இரண்டரை மணி நேரம் இயக்கப்படாததால், மக்கள் பாதிக்கப்பட்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X