மன உளைச்சல் ஏற்படுத்தும் டி.எஸ்.பி.,: ஆயுதப்படை காவலர்கள் கண்ணீர்
Updated : டிச 02, 2022 | Added : டிச 02, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

'மன உளைச்சல் ஏற்படுத்தும் டி.எஸ்.பி., மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று ஆயுதப்படை போலீசார், முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

திருப்பத்துார் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர்கள், முதல்வருக்கு அனுப்பிய மனு விவரம்: திருப்பத்துார் ஆயுதப்படைக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள டி.எஸ்.பி., விநாயகம், காவலர்களுக்கு போதிய அளவில் விடுப்பு தர மறுக்கிறார். திருமணத்துக்கு ஈட்டிய விடுப்பு 30 நாள் கேட்டால், 7 நாள் மட்டுமே அனுமதிக்கிறார்.

மருத்துவ சிகிச்சை எடுக்க 30 நாள் கேட்டால் 2 நாள் தற்செயல் விடுப்பு கொடுத்து பாதுகாப்பு பணிக்கு அனுப்புகிறார். வாராந்திர ஓய்வும் தருவதில்லை. ஓய்வு கேட்டு மனு அளித்தால் முகத்தில் துாக்கி வீசுகிறார். 'எங்கள் விடுப்பை தர வேண்டும்' என்று கேட்கும் காவலர்களுக்கு, 'மெமோ கொடுப்பேன்' என்றும், 'பதவி உயர்வை நிறுத்தி வைத்து விடுவேன்' என்றும் மிரட்டல் விடுக்கிறார்.

அவரது ஜாதி காவலர்களுக்கு மட்டும் கேட்கும் விடுப்பை அப்படியே வழங்கி விடுகிறார். ஆயுதப்படையில் கழிவறை வசதி எதுவும் இல்லை. எனினும் பணி முடிந்து மாலை வரும் காவலர்களை வீட்டுக்கு அனுப்பாமல் அங்கேயே கட்டாயப்படுத்தி தங்க வைக்கிறார்.

இதனால் திருமணம் ஆன ஆயுதப்படை காவலர்கள் மன உளைச்சலில் சிக்கி தவிக்கின்றனர். சிலரிடம் தற்கொலை எண்ணமும் ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதம் தவிர்க்க டி.எஸ்.பி., விநாயகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

மனுவை டி.ஜி.பி., வடக்கு மண்டல ஐ.ஜி., வேலுார் டி.ஐ.ஜி., மற்றும் திருப்பத்துார் எஸ்.பி., ஆகியோருக்கும் ஆயுதப்படை காவலர்கள் அனுப்பியுள்ளனர்.


-நமது நிருபர்-

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் வேலூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
Lion Drsekar - Chennai ,இந்தியா
02-டிச-202215:10:42 IST Report Abuse
Lion Drsekar எல்லா நிலைகளிலும் இவைகள் பின்பற்றப்பட்டு வருகிறது . முதல்வருக்கு புகார் அனுப்பிய இவருக்கு பாதுகாப்பு தேவைப்படும் நிலை, இங்குதான் எல்லாமே தலைகீழாக மாற்றிவைத்திருக்கிறார்களே யாரைக் குறை கூறுவது ? வந்தே மாதரம்
Rate this:
Cancel
V GOPALAN - chennai,இந்தியா
02-டிச-202215:06:05 IST Report Abuse
V GOPALAN In Kerala all remote routes are train facility on daily Basis. Only in Tamilnadu we have we have stations but no passenger trains.
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
02-டிச-202214:41:12 IST Report Abuse
M S RAGHUNATHAN இட ஒதுக்கீடு விபரீதம். லஞ்சம் புகுந்து விளையாடுது. திறமைக்கு மதிப்பும் கிடையாது. மரியாதையும் கிடையாது. இம்மாதிரி நிலை தொடர்ந்தால் அது அரசுக்கும், காவல் துறைக்கு ஆபத்து. DGP வெளிப்படையாக நடவடிக்கை எடுத்தால்தான் காவல் துறையினருக்கு தலைமை மீது நம்பிக்கை வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X