உடுமலை : திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில், இலவச அயர்ன் பாக்ஸ் வழங்கப்படுகிறது.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினராக இருக்கவேண்டும். ஆண்டு வருமானம், ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்கவேண்டும்.
குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே அயர்ன் பாக்ஸ் வழங்கப்படும். கடந்த பத்து ஆண்டுக்குள், திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில், அயர்ன் பாக்ஸ் பெற்றிருக்கக்கூடாது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும்.