உடுமலை : புதுமைப்பெண் திட்டத்தில், அரசுப்பள்ளிகளில் படித்த மாணவியரின் உயர்கல்விக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் அரசு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், நடப்பு 2022 - 23 கல்வியாண்டில், முதல்கட்டமாக, 40 கல்லுாரிகளில், 3,257 மாணவியர் பயனாளியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களுக்கு, மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டத்தில், கல்வி பயின்று முடிக்கும்வரை, மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஆண்டுக்கு, 3 கோடியே 90 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
இரண்டாம்கட்டமாக, மாவட்டத்தில், 68 கல்லுாரிகளில் படிக்கும், 3,091 முதலாம் ஆண்டு மாணவியர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கு, கல்வித்துறை மற்றும் வங்கியிலிருந்து ஒப்புதல் பெறப்பட்ட உடன், நிதியுதவி வழங்கப்படும் என, கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.