சிவகங்கை : சிவகங்கையில் பள்ளி சென்ற பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலி தொழிலாளி செந்தில்முருகனுக்கு 32, எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பின் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் அவர் மீது வழக்கு பதிந்தார். இவ்வழக்கில் செந்தில்முருகனுக்கு எட்டு ஆண்டுகள் நான்கு மாதம் சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து சிவகங்கை 'போக்சோ' நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.ஒரு லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார்.