உடுமலை : உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கடுமையான பனிப்பொழிவும், நடுங்க வைக்கும் குளிரான சீதோஷ்ணமும் நிலவுகிறது.
உடலில் குளிர் பாதிக்காமலும், வெப்பத்தை தக்க வைக்கும் விதமாகவும், உல்லன் ஸ்வெட்டர்கள், குரங்கு குல்லா, மப்ளர், ஜெர்கின், காதுகளை அடைக்கும் ஹியர் கேப் என பல விதமான ஆடை வகைகளை பயன்படுத்துகின்றனர். அவ்வகையில், இவற்றின் விற்பனை தற்போது உடுமலையின் பல பகுதியில் அதிகரித்து வருகிறது.
பஞ்சாப் பகுதியில் இருந்து, இவற்றைக் கொள்முதல் செய்து, வட மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். இதுதவிர, கடைகளிலும், இத்தகைய ஆடை விற்பனை அதிகரித்துள்ளது.