குப்பைக்கு தீ வைப்பு
உடுமலை நகர வீதிகளில், குப்பை ரோட்டோரங்களில் கொட்டப்படுகிறது. சில சமயங்களில் அவை தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால், சுற்றுச்சூழல் மாசடைகிறது. எனவே, நகராட்சியினர் தெருக்களில் குப்பைக்கு தீ வைத்து எரிப்பதை தடுக்க வேண்டும்.
- செல்வம், உடுமலை.
பள்ளத்தால் பாதிப்பு
உடுமலை உழவர் சந்தை ரோடு, உயர்மின் கோபுர விளக்கு அருகே ரோட்டில் கற்கள் பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பள்ளத்தை நகராட்சியினர் சீரமைக்க வேண்டும்.
- மோகன், உடுமலை.
கோழிக்கழிவுகள் வீச்சு
உடுமலை ராமசாமிநகர் - அரசு கல்லுாரி செல்லும் ரோட்டில் கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இங்கு கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.
- சந்திரன், உடுமலை.
பஸ் ஸ்டாண்ட் ரோடு சேதம்
உடுமலை, பஸ் ஸ்டாண்டில், ஓடுதளம் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், பஸ்கள் செல்ல முடியாமல் திணறும் நிலை ஏற்படுகிறது. பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். இந்த ரோட்டை சீரமைக்க வேண்டும்.
- காந்திராஜ், உடுமலை.
போக்குவரத்து நெரிசல்
உடுமலை, பொள்ளாச்சி ரோட்டில், வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால், பிற வாகனங்கள் செல்ல முடிவதில்லை. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிவக்குமார், உடுமலை.
பராமரிப்பு இல்லை
உடுமலை-பழநி ரோட்டில், காந்திநகர் பஸ் ஸ்டாப் நிழற்கூரை பராமரிப்பின்றி உள்ளது. இங்கு தேவையற்ற பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. இதனால், மக்கள் இதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிழற்கூரையை நகராட்சியினர் பராமரிக்க வேண்டும்.
- ரமேஷ், உடுமலை.
கழிவுகளை அகற்றணும்
மடத்துக்குளம், அமராவதி ஆற்றுப்பாலம் முன், குப்பை, கட்டடக்கழிவுகள், இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. இக்கழிவுகளை பேரூராட்சி அதிகாரிகள் அகற்ற வேண்டும்.
- கருப்புசாமி, உடுமலை.
சிக்னல் அமைக்கணும்
மடத்துக்குளம், நால் ரோடு பல்வேறு கிராமங்களின் முக்கிய சந்திப்பாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால், போக்குவரத்து அதிகமாக உள்ளது. எனவே, வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில், அங்கு தானியங்கி சிக்னல் அமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கனகராஜ், உடுமலை.
பஸ் ஸ்டாண்ட் வேண்டும்
உடுமலை - கொழுமம் பாதையில், கொமரலிங்கம் உள்ளது. பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் வாகனங்கள் இதன் வழியாக செல்கின்றன. உடுமலை- பழநி பாதைக்கு மாற்றுப்பாதையாகவும் செயல்படுகிறது. எனவே, நெரிசலை தவிர்க்க பஸ் ஸ்டாண்ட்டை பேரூராட்சி நிர்வாகத்தினர் அமைக்க வேண்டும்.
- சிவசாமி, உடுமலை.
பூங்காவை சீரமைக்கணும்
அமராவதி அணைக்கு தினமும் நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். இங்குள்ள சிறுவர் பூங்கா பராமரிப்பின்றி, பொலிவிழந்து காணப்படுகிறது. இங்கு வரும் சிறுவர்கள், பெண்கள் ஏமாற்றமடைகின்றனர். எனவே இந்த பூங்காவை சீரமைத்து பொலிவுபடுத்த பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராம்குமார், உடுமலை.