உடுமலை : கோழிக்குட்டை கிராம குடியிருப்புகளில், மழை நீர் வெளியேற வழியில்லாமல், தேங்கி, டெங்கு பரவும் அபாயம் உள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அப்போது, வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல், மக்கள் தவிக்கின்றனர். மேலும், பல நாட்களுக்கு மழை நீர் தேங்கி, நன்னீரில் கொசுக்கள் உருவாகி, டெங்கு பரவும் அபாயத்தில் உள்ளது.
அப்பகுதி மக்கள் கூறியதாவது:
மழைக்காலத்தில், குடியிருப்பில் இருந்து தண்ணீர் வெளியேறாமல், தேங்குகிறது. அருகிலுள்ள வீதியில் கான்கிரீட் ரோடு அமைக்கும் போது, முறையாக வடிகால் வசதி ஏற்படுத்தவில்லை.
இதனால், ஒரு பகுதியிலுள்ள வீடுகளின் முன் மட்டும், அதிகளவு தண்ணீர் தேங்குகிறது. எனவே, அனைத்து பகுதிகளிலும், கான்கிரீட் ரோடு அமைக்க வேண்டும்.
மழை நீர் வெளியேறும் வகையில், வடிகால் ஏற்படுத்துவது அவசியம். இது குறித்து கிராம சபையிலும், ஒன்றிய அதிகாரிகளிடமும் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. தற்போது நோய் பரவும் அபாயத்தில் வசித்து வருகிறோம்.
இவ்வாறு, தெரிவித்தனர்.