வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த பெருமாள், டவுன்ஹால் ரோடு கிளையில் முத்ரா கடன் தர மறுப்பதாக கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் உண்மைக்கு மாறாக தகவல் தெரிவித்துள்ளார். அவரது கடன் விண்ணப்பத்தை பரிசீலித்ததில், 'சிபில் ஸ்கோர்' குறைவாக இருந்ததாலும், ஏற்கனவே பெற்ற கடன்களை கட்டுவதில் தாமதம் இருந்ததாலும் அவருக்கு கடன் வழங்க இயலவில்லை. இதுகுறித்து அவருக்கு எழுத்து மூலமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனால் வங்கிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அவர் கூறியிருப்பதை மறுக்கிறோம்.
யூனியன் பாங்க் ஆப் இந்தியா மதுரை மாவட்டத்தில் 18 கிளைகள் மூலமாக ரூ.33.91 கோடிக்கு 899 முத்ரா கடன்களை வழங்கியுள்ளது. இதற்காக கலெக்டரிடமிருந்து சிறந்த வங்கி என்ற விருதையும் பெற்றுள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.