வால்பாறை மலைப்பாதையை விரிவுபடுத்த வான்வழி அளவீடு!
Updated : டிச 02, 2022 | Added : டிச 02, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

பொள்ளாச்சி: ஆழியாறு முதல், வால்பாறை வரை உள்ள, மலைப்பாதையை விரிவாக்கம் செய்ய, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, 'வான்வழி லைடர் அளவீடு' முறையை, பயன்படுத்தி அளவீடு செய்யும் பணிகள், தீவிரமாக நடக்கிறது.



latest tamil news


பொள்ளாச்சி --- வால்பாறை ரோடு, 64 கி.மீ., துாரம் கொண்டது. இதில், ஆழியாறு முதல் வால்பாறை வரையிலான, 39.40 கி.மீ., துாரமானது, மலைப்பாதையாக அமைந்துள்ளது. மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, இந்த ரோடு, 40 கொண்டை ஊசி வளைவுகள் கொண்டது. இதில்,18க்கும் மேற்பட்ட இடங்களில், 200 முதல் 300 மீட்டர் துாரத்துக்கு, ஆங்காங்கே ரோடுகள், மிக குறுகலாக உள்ளது.
ஒட்டுமொத்தமாக, 5 கி.மீ., துாரத்துக்கு, ரோடு குறுகலாக உள்ளதால், வாகன ஓட்டிகளின் பயணம், பாதுகாப்பு இன்றி உள்ளது. வளைவுகளில் வாகனங்கள் திரும்பும்போது, அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.

மழை காலங்களில் மண்சரிவு ஏற்படும் நேரங்களில், குறுகலான ரோடுகள், ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு, வாகன போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதுபோன்ற நேரங்களில், வால்பாறைக்கு செல்வதற்கான, பயண நேரம் அதிகரிக்கிறது. இந்த ரோட்டை சீரமைத்து, தேவையான அளவு விரிவாக்கம் செய்ய வேண்டுமென, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில், ரோட்டை விரிவாக்கம் செய்ய, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன.






நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மலைப்பாதையில் 'எஸ்' -வளைவு வரும் இடங்கள், கொண்டை ஊசி வளைவுகள் ஆகியவற்றில்,வாகனங்கள் திரும்பும் போது சிக்கல் ஏற்படுவதுடன், விபத்துக்களுக்கும் வழிவகுக்கிறது.
இதையடுத்து, 'எஸ்' -வளைவு பகுதியாக உள்ள, 25வது கொண்டை ஊசி வளைவு உட்பட, ஐந்து வளைவுகளை கண்டறிந்து, அவற்றின்வளைவுகளை குறைத்து, நேரடியாக ஒரே ரோடாக அமைக்க முயற்சி எடுக்கப்பட உள்ளது.

கொண்டை ஊசி வளைவுகளில், திரும்பும் வாகனங்கள், 'ரிவர்ஸ்' எடுக்காமல் எளிதில் திரும்பும் விதமாகவும், வளைவுகளில் சிறிது மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனுடன், அடிவாரத்தில் துவங்கி மலை உச்சி வரை, ஆங்காங்கே 5 மீட்டர் அகலம் உள்ள ரோட்டை, 7 மீட்டராக விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளத்தாக்கு பகுதிகளில், வாகனங்கள் திரும்ப வசதியாக, சுவர் எழுப்பி, ரோடு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

அதேபோல், கொண்டை ஊசி வளைவுகளில் வாகனங்கள் திரும்பும்போது, விபத்தில் சிக்குவதை தடுக்க, பாறைகளை குடைந்து, ரோடு அமைப்பதை தடுக்க,நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த, முடிவு செய்துள்ளோம்.
வனத்துறையிடம் இருந்து, நிலம் பெறுவதை தவிர்க்க, முழுதும் துறை வசம் உள்ள இடத்திலேயே ரோட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.






இம்மாத இறுதிக்குள் திட்ட அறிக்கை!




திட்ட அறிக்கை தயார் செய்ய, 'ஏரியல் லைடர் அளவீடு' எனப்படும் 'வான்வழி லைடர் அளவீடு' முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையில் பயன்படுத்தப்படும் கருவியை, மலைப்பாதையில் ஒவ்வொரு இரண்டு கி.மீ., துாரத்துக்கும், வானில் பறக்கவிட்டு, பாதையின் ஒட்டுமொத்த, நீளம், உயரம் மற்றும் அகலம் என, முப்பரிமாண முறையில் அளவிடப்படுகிறது.

முப்பரிமாண முறையில், அளவீடு செய்யப்படுவதால், ரோட்டில் உள்ள 'எஸ்' -வளைவு மற்றும் கொண்டை ஊசி வளைவுகளில், எந்த இடத்தில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதும், மிக குறுகலாகவும், சிக்கலாகவும் ரோடு உள்ளது என்பதை, எளிதில் அறிந்து கொள்ளலாம்.திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள், 50 சதவீதம் முடிந்துள்ளன. மழை காரணமாக, சில தினங்களாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. விரைவில், மீதமுள்ள பணிகள் முடிக்கப்பட்டு, இம்மாத இறுதிக்குள் திட்ட அறிக்கை தயாரிக்கும், பணிகள் முடிக்கப்பட்டு, அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன்பின், தேவையான நிதி பெறப்பட்டு, சாலை விரிவாக்கம் செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
02-டிச-202210:47:20 IST Report Abuse
தியாகு வால்பாறை மலைப்பாதையை விரிவுபடுத்த வான்வழி அளவீடு...நல்லா செக் பண்ணுங்க எஜமான். கோவையில் கட்டுமரம் தமிழ்சங்கம் மாநாடு நடத்தியபோது கணியக்கா நிறைய சொத்துக்களை கோவையில் சுருட்டியதாக தகவல். கண்டிப்பா கோவைக்கு பக்கத்தில் இருக்கும் வால்பாறையில் கணியக்கா ஏதாவது டீ எஸ்டேட்டையோ காப்பி எஸ்டேட்டையோ சுருட்டியிருக்க வாய்ப்புகள் அதிகம். வானத்தில் இருந்து பார்த்தால் தெரிந்துவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X